சீனாவால் தங்கள் நாடு பயனடைய முடியாது என்று பாகிஸ்தான் மூத்த அமைச்சர் அஹ்சன் இக்பால் ஒப்புக்கொண்டுள்ளார்.
பாகிஸ்தான் பொருளாதார நிலை பல ஆண்டுகளாக அதல பாதாளத்தை நோக்கிதான் சென்றுகொண்டிருக்கிறது. உற்பத்தி, மின்சாரம், விவசாயம், ஏற்றுமதி, ஜவுளி என அனைத்து துறைகளுமே தொடர்ந்து சரிவைச் சந்தித்தபடிதான் உள்ளன.
இதுதொடர்பாகப் பேசிய அஹ்சன் இக்பால், பாகிஸ்தானின் பொருளாதாரம் எழுச்சி பெறுவதற்கான பல வாய்ப்புகளை இழந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
சீனாவின் ஜின்ஜியாங்கை பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள குவாடர் துறைமுகத்துடன் இணைக்கும் 60 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான திட்டம் சீனாவின் செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் நோக்கில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடினமான காலங்களில் சீனா பாகிஸ்தானுக்கு உதவியதாகவும், ஆனால் நாடு பயனடையவில்லை என்றும் இக்பால் குறிப்பிட்டுள்ளார்.
















