கோவையில் நடைபெற்ற பழங்கால கார் கண்காட்சியில் ஏராளமான கார்கள் அணிவகுத்து சென்றதை மக்கள் கண்டுகளித்தனர்.
பல்வேறு சிறப்புகளைக் கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கோவை விழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
அதன் ஒரு பகுதியாகக் கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களின் பழங்கால கார்களின் அணிவகுத்துச் சென்றனர்.
சுதந்திரத்துக்கு முன் பயன்படுத்திய பென்ஸ், செவர்லே, ஃபோர்டு, பத்மினி, அம்பாசடர், வோக்ஸ்வேகன், போன்ற பல்வேறு வகையான கார்கள் முதல் 1995 ம் ஆண்டு வரை உள்ள 50க்கும் மேற்பட்ட பழைய மாடல் கார்கள் கண்காட்சியில் இடம்பெற்றன. இதனை ஆர்வமுடன் ஏராளமான மக்கள் கண்டு களித்தனர்.
















