சென்னை மாதவரத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாதவரம் எம்.ஆர்.எச் சாலையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில், முன்னறிவிப்பின்றி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
திடீர் கட்டண உயர்வால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சம்மந்தப்பட்ட பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பள்ளியின் நுழைவு வாயிலில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.
அப்போது பேசிய பெற்றோர், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக 25 சதவீத கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டினர்.
இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டுத் தீர்வுகாண வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.
















