புதுச்சேரியில் காவல்துறையினர் சிலர் கள் குடித்துவிட்டு நடனமாடியதாக வீடியோ வெளியான நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்த காவல் ஆய்வாளர் விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்
ஏனாம் பிராந்தியத்தை சேர்ந்த போலீசார் குற்றவாளி ஒருவரை புதுச்சேரி சிறையில் அடைத்துவிட்டு அதே வாகனத்தில் திரும்பிச் சென்றுக்கொண்டிருந்தனர்.
அப்போது காவல் ஆய்வாளர் ஆடலரசன் என்பவர் கள் போன்ற பானத்தைக் குடித்துவிட்டு நடனமாடினார். இது தொடர்பான வீடியோ வெளியாகி விமர்சனத்துக்குள்ளானது.
இந்நிலையில் தான் குடித்தது கள் இல்லை மோர் எனவும், அதனைக் குடித்துவிட்டு பயண களைப்பு தெரியாமல் இருக்க நடனமாடியதாகவும் ஆடலரசன் விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
















