தொழில்நுட்பக் கோளாறு மற்றும் வங்கி விடுமுறையால் கட்டணம் செலுத்த முடியாத மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் கடந்த நவம்பர் 3ம் தேதி நடத்தப்பட்ட இறுதி கலந்தாய்வில் ஷில்பா சுரேஷ் என்ற மாணவி மருத்துவ படிப்பிற்கு தேர்வாகி இருந்தார்.
அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டிய இறுதி நாள், விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டதால், கட்டணத்தைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, கட்டணத்தைச் செலுத்த கூடுதல் அவகாசம் கோரியும் வழங்கப்படாததால், சம்மந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்துச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள அனுமதிக்கும்படி தனியார் கல்லூரியின் சேர்க்கை குழுவுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
















