பீகார் சட்டப்பேரவையின் இளம் வயது எம்எல்ஏவாக பாஜக சார்பில் போட்டியிட்ட நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பீகாரில் உள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 6 மற்றும் 11ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றது. இதில், பாஜக சார்பில் அலி நகர் தொகுதியில் 25 வயது நிரம்பிய நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் போட்டியிட்டார்.
இந்நிலையில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளரும், மூத்த அரசியல்வாதியுமான பினோத் மிஸ்ராவை விட 11 ஆயிரத்து 730 வாக்குகள் கூடுதலாக பெற்று, மொத்தம் 84 ஆயிரத்து 915 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.
இதன் மூலம் பீகார் சட்டப்பேரவையின் இளம் வயது எம்எல்ஏவாக மைதிலி தாக்கூர் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
















