பீகாரில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்த முஸாபர்பூர் தொகுதியில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது.
பீகார் மாநிலத்தில் இரு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் வென்று ஆட்சி தக்க வைத்துள்ளது.
இந்நிலையில், திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் பிரச்சாரம் செய்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துள்ளது.
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக பீகார் மாநிலம் முஸாபர்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்திருந்தார்.
அப்போது பேசிய அவர், பீகார் தேர்தலில் INDI கூட்டணி வெற்றி பெற்ற பிறகு பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருவேன் எனக் கூறினார். இந்நிலையில் முஸாபர்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ரஞ்சன் குமார் ஒரு லட்சத்து 477 வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பிஜேந்திர சௌத்ரி 32 ஆயிரத்து 657 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்..
















