தேர்தலில் வாக்களித்து வெற்றி பெற வைத்த பீகார் மக்களுக்கும், வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பிரதமர் மோடிக்கும் தலைவணங்குவதாக அம்மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றியை பெற்றுள்ளது. இதனை பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கொண்டாடி வருகின்றன. இந்த நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தந்த பீகார் மக்களுக்கு முதலமைச்சர் நிதீஷ்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மாநிலத்திலுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும், பிரதமர் மோடியின் ஆதரவிற்கும் தான் தலைவணங்கி மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். மேலும், அனைவரின் ஆதரவுடன் பீகார் மேலும் முன்னேறும் என்றும் நாட்டின் வளர்ந்த மாநிலங்களில் பீகாரும் விரைவில் இடம்பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
















