பீகார் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதத்தை தற்போது பார்க்கலாம்…
பாஜக 20 சதவிகித வாக்குகளையும், ஐக்கிய ஜனதா தளம் 19.28 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளன. ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 4.98 வாக்குகளையும் பெற்றுள்ளது..
ராஷ்டிரிய ஜனதா தளம் 22.97 சதவிகிதமும், காங்கிரஸ் கட்சி 8.73 சதவிகிதமும் வாக்குகளை பெற்றுள்ளன. மற்ற கட்சிகளுக்கு 13.95 சதவிகித வாக்குகளும், நோட்டாவுக்கு 1.82 சதவிகித வாக்குகளும் கிடைத்துள்ளன.
















