இந்திய ராணுவத்தின் கஜ்ராஜ் படைப்பிரிவு, காமங் இமயமலைத் தொடரில் சுமார் 16 ஆயிரம் அடி உயரத்திற்கு, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மோனோ ரயில் அமைப்பை வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளது.
அருணாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ள காமங் இமயமலைத் தொடரில், மிகக் கடுமையான நிலப்பரப்பு, செங்குத்தான பாறைகள், அதிக பனிப்பொழிவு காரணமாக, அடிக்கடி போக்குவரத்து துண்டிப்பு ஏற்படுகிறது.
இதனால் அப்பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுக்கும், காவல் நிலையங்களுக்கும் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்வது சவாலாக இருந்து வந்தது. இந்நிலையில், இந்திய ராணுவத்தின் கஜ்ராஜ் படைப்பிரிவினர், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மோனோ ரயிலை 16 ஆயிரம் அடி உயரத்திற்கு அமைத்துச் சாதனை படைத்துள்ளனர்.
இதன் மூலம் 300 கிலோ வரையிலும் பொருட்களை எடுத்துச் செல்ல முடியும் என்றும், காயமடைந்த வீரர்களை விரைவாக வெளியேற்றுவதற்கு ஏதுவாக அமையும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
















