காஞ்சிபுரம் மாவட்டம் கோனேரிக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட அரப்பனஞ்சேரி பகுதியில், ஊராட்சிக்குச் சொந்தமான டிராக்டரை சிறைபிடித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
குடியிருப்புகளை ஒட்டியுள்ள நீர்நிலையில் ஊராட்சி நிர்வாகத்தினர் குப்பைகள் கொட்டி வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், அப்பகுதிக்குள் குப்பைகளுடன் வந்த ஊராட்சிக்குச் சொந்தமான டிராக்டரை சிறைபிடித்து அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் நீர்நிலையில் குப்பைகள் கொட்டப்படுவது அதிர்ச்சியளிப்பதாகக் கூறும் அப்பகுதி மக்கள், இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
















