சென்னை நுங்கம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் மடிக்கணினியை திருடிய நபரை, பல் மருத்துவரும், நடிகையுமான ஷல்பா நிகர் தேடிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.
சென்னை நுங்கம்பாக்கம் அருகே உள்ள தனியார் பல் மருத்துவமனையில் நள்ளிரவு நேரத்தில் வரவேற்பறையில் இருந்த 2 மடிக்கணினிகளை மதுபோதையில் வந்த மர்மநபர் திருடி சென்றுள்ளார். ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில், மருத்துவர் ஷில்பா போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு, திருடிய நபரை வெளியே வந்து தேடியுள்ளார்.
பின்னர், அவ்வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் மற்றும் இளைஞர்களின் உதவியுடன் சுமார் 2 மணி நேர தேடுதலுக்குப் பிறகு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள மேம்பாலத்திற்கு கீழே, மடிக்கணினியை திருடிய நபரை கண்டுபிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
பின்னர், மடிக்கணினிகளை திருடிய முகமது ஃபைசில் என்வரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் ஷில்பா நிகர், மடிக்கணினியை கண்டறிய உதவிய ஆட்டோ ஓட்டுநர் மற்றும் இளைஞர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டார். பெண்கள் தைரியமாக செயல்பட வேண்டும் எனவும், எந்த பிரச்னையாக இருந்தாலும் தாமே தீர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
















