ராமநாதபுரம் மாவட்டத்தில் சர்வர் கோளாறு காரணமாகப் பயிர் காப்பீட்டுத் திட்டத்தை பதிவு செய்ய முடியாமல் விவசாயிகள் அவதியடைந்துள்ளனர்.
திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் 26 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர்.
பயிர் காப்பீடு செய்ய இன்று கடைசி நாள் என்பதால், ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், சர்வர் கோளாறு காரணமாக விவசாயிகள் தங்கள் விண்ணப்பங்களைச் சரியான நேரத்தில் சமர்ப்பிக்க முடியாமல் அவதியடைந்துள்ளனர்.
இதனையடுத்து, இணையதள சிக்கலுக்குத் தீர்வு காணாவிட்டால், விளைச்சல் பாதிப்பால் ஏற்படும் இழப்பிற்கு அரசே முழுப் பொறுப்பு ஏற்க நேரிடும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
















