தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியைப் பீகார் மக்கள் அளித்து வரலாற்றை உருவாக்கியுள்ளதாகப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை,
பிரதமர் மோடியின் தலைமை, நிதிஷ்குமாரின் ஆட்சிமீது பீகார் மக்கள் மகத்தான நம்பிக்கை வைத்துள்ளதை தேர்தல் வெற்றி உறுதி செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.
இந்த வெற்றி, பீகாரின் ஒவ்வொரு சகோதர சகோதரியும் எதிர்கால வளர்ச்சிமீது வைத்திருக்கும் நம்பிக்கையை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒற்றுமைக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் உறுதிப்பாடு, சமூகத்தின் ஒவ்வொரு பிரிவிலும் எதிரொலித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, பிரிவினைவாதம், சந்தர்ப்பவாத அரசியலைவிட முன்னேற்றம், நல்லாட்சி மற்றும் தேசிய நலன் எப்போதும் மேலோங்கும் என்ற செய்தியைப் பீகார் வெற்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
















