அயர்லாந்தின் டப்ளினில் அதிகளவு கடல் நுரை வெளியேறியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
அயர்லாந்தின் தலைநகர் டப்ளினின் புறநகர் கடற்கரை பகுதியான லவுக்சன்னியில் கடல் நுரையால் கடற்கரையோர சாலைகள், வீடுகள் வெண்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது.
இந்தக் கடல் நுரைகள், பாசிகள், தாவரங்கள், மீன்கழிவுகள் போன்றவை அலைகளுடன் கலந்து உருவாவதாகக் கூறப்படுகிறது. இதனால் சரும நோய்கள் ஏற்படும் எனக் கடற்கரையோர மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
















