நாமக்கல் கிட்னி முறைகேடு விற்பனை வழக்கில் முக்கிய இடைத்தரகரை போலீசார் கைது செய்து பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவின்பேரில், சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
பள்ளிபாளையம் பகுதியில் கிட்னி மோசடி தொடர்பாகப் புரோக்கர்கள் ஸ்டான்லி மோகன், ஆனந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களைச் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் 5 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
இதில், ஏழ்மை நிலையில் உள்ள விசைத்தறி தொழிலாளர்களை இடைத்தரகர் முத்தையன் என்பவர் இலங்கை, நேபாளம் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று முறைகேடாகக் கிட்னி விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனை அடுத்து, முத்தையனை கைது செய்த சிறப்பு புலனாய்வு போலீசார், அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்தனர். பின்னர், முத்தையன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
















