அரசியல் கட்சி தலைவர்களை யூடியூபர் சாட்டை துரைமுருகன் தொடர்ந்து அவதூறாகப் பேசிவருவதாகக் குற்றஞ்சாட்டி திருச்சியில் உள்ள அவரின் வீட்டை முற்றுகையிட்டு அமமுக நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களை யூடியூபர் சாட்டை துரைமுருகன் தனது சமூக வலைதள பதிவில் அவதூறாகப் பேசிவருதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவதூறாக வெளியிட்ட பதிவுகளை உடனே நீக்க வேண்டும் என்றும், சாட்டை துரைமுருகனை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுதுதி, அமமுக நிர்வாகிகள் அவரின் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சென்ற போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட அமமுக நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
















