நெல்லையில் குழந்தைகள் தினத்தையொட்டி கையில் தீப ஜோதியுடன் பள்ளி மாணவர்கள் ஸ்கேட்டிங் செய்து அசத்தினர்.
நெல்லையில் உள்ள ஆப்பிள் டிரஸ்ட் பள்ளி மற்றும் வெங்கடசாமி நாயுடு மேல்நிலைப் பள்ளி சார்பில் குழந்தைகள் தினவிழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக ஸ்கேட்டிங் பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகள், கைகளில் தீப ஜோதியை ஏந்தியவாறு ஸ்கேட்டிங் செய்தனர்.
ஆப்பிள் டிரஸ்ட் பள்ளியில் இருந்து தொடங்கிய ஸ்கேட்டிங் பேரணி, 3 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்றது. கையில் தீபத்தை ஏந்தி மாணவர்கள் சீராக ஸ்கேட்டிங் செய்ததை பெற்றோர், பொதுமக்கள் கண்டு களித்தனர்.
















