தேசிய ஒற்றுமையை வலியுறுத்திக் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள வீரர்களுக்குத் தருமபுரியில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
மத்திய அரசின் சார்பில் சர்தார் வல்லபாய் பட்டேலின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு, தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி 150 வீரர்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 1-ம் தேதி காஷ்மீரில் இருந்து தொடங்கிய இந்தச் சைக்கிள் பயணத்தில் 20 மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், 9 மாநிலங்களைக் கடந்து 10-வது மாநிலமாகத் தமிழகத்தில் உள்ள தருமபுரி மாவட்டத்திற்கு அவர்கள் வந்தடைந்தனர்.
அப்போது அவர்களுக்குத் தனியார் மருத்துவமனை சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
















