கொடைக்கானலில் உள்ள குணா குகை சுற்றுலா தளத்தில் ஸ்டைலாகப் போட்டோவுக்கு போஸ் கொடுத்த பெண்ணை, குரங்கு அச்சுறுத்தி விரட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.
கொடைக்கானலில் உள்ள குணா குகை சுற்றுலா தளத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
அப்பகுதியில் அதிகளவில் குரங்குகள் காணப்படுவதோடு, சுற்றுலா பயணிகளின் உடமைகளை அவ்வப்போது எடுத்துக்கொண்டு மரத்தின் மீது செல்வதும் தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில், அங்கு வந்திருந்த திருச்சியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மரத்தின் மீது அமர்ந்து ஸ்டைலாக ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.
அப்போது, திடீரென அவர் மீது குரங்கு குதித்ததால், மிரண்டு போன அந்தப் பெண் அங்கிருந்து தெறித்து ஓடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
















