டெல்லி கார் குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கு உதவிய ஹவாலா முகவர்கள் இருவரை புலனாய்வு அமைப்புகள் கைது செய்து விசாரித்து வருகின்றன.
கடந்த 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர்.
நாட்டையே உலுக்கிய இந்தச் செயலில் ஈடுபட்டது காஷ்மீரை சேர்ந்த மருத்துவரான உமர் நபி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் உமர் நபியின் பயங்கரவாத செயலுக்குத் தேவையான நிதியுதவியை வழங்கிய இரு ஹவாலா முகவர்களை புலனாய்வு அமைப்புகள் கைது செய்து விசாரித்து வருகின்றன.
முதற்கட்ட விசாரணையில் கிட்டத்தட்ட 20 லட்சம் ரூபாய் ஹவாலா முறையில் பரிமாற்றம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பணம், வெடிக்கும் தன்மை கொண்ட NPK உரத்தை 26 குவிண்டால் வாங்குவதற்காகச் செலவிடப்பட்டுள்ளது.
சான்றுகளைச் சரிபார்க்காமல் விற்பனை செய்ததற்காக 20-க்கும் மேற்பட்ட உரக் கடைக்காரர்களும் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத வலையமைப்பு எவ்வாறு நிலைநிறுத்தப்பட்டது என்பதை கண்டறிந்து அவற்றைத் தகர்க்கும் பணியில் புலனாய்வு அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.
















