பிரிட்டனை சேர்ந்த பெண் டிராவல் இன்புளூயன்சர் ஒருவர், பண்டைய தற்காப்புக் கலையான களரிபயட்டை கண்டு வியந்த வீடியோ வைரலாகி வருகிறது.
பிரிட்டனை சேர்ந்த டிராவல் இன்புளூயன்சரான டீனா என்பவர், சமீபத்தில் கேரளாவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது மிகவும் பழமையான தற்காப்பு கலையான களரிபயட்டு நிகழ்ச்சியை அவர் நேரில் கண்டுள்ளார்.
இதனை கண்டு வியந்து போன டீனா, களரிபயட்டு நிகழ்ச்சியின் சிறிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டிராவல் இன்புளூயன்சர் டீனா, இன்னும் அந்த நிகழ்ச்சியிலிருந்து தன்னால் மீண்டு வரமுடியவில்லை என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
இதனை கண்ட நெட்டிசன்கள் களரிப்பயட்டு கலையின் பாரம்பரியம் குறித்த தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
















