தருமபுரி மாவட்டம், அரூர் அருகே பொதுப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டதால், பள்ளி செல்லும் சிறுவர்கள் பாறைகள் மேல் ஏறிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் பயன்படுத்தும் பாதையில் பெரிய பெரிய பாறை கற்களை கொட்டி வைத்துப் பல காலமாக ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக நீதிமன்றமே உத்தரவிட்டும் கூட, ஆக்கிரமிப்புகள் இதுவரை அகற்றப்படவில்லை.
இதுகுறித்து உயரதிகாரிகளிடம் பொதுமக்கள் புகாரளித்தும் எந்த முன்னேற்றமும் இல்லை எனக் கூறப்படுகிறது.
பொதுப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டதால், பள்ளி செல்லும் சிறுவர்கள் பாறைகள் மேல் ஏறிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
















