பீகார் பேரவை தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தோல்வியடைந்த நிலையில் அக்கட்சியின் நிறுவனர் லாலு பிரசாத்தின் மகள் ரோஹிணி ஆச்சார்யா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தேஜஸ்வியின் அண்ணன் தேஜ் பிரதாப் யாதவும் ஏற்கெனவே தனிக்கட்சி தொடங்கியிருக்கும் நிலையில் சகோதரியும் அரசியலில் இருந்து விலகியுள்ளார்.
இதுகுறித்து ரோஹிணி ஆச்சார்யா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தான் அரசியலை விட்டு விலகுகிறேன் என்றும் தனது குடும்பத்துடனான உறவையும் முறித்துக்கொள்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
















