சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தெப்பக்குளத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்த விவகாரத்தில் தவறு நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தெப்பக்குளத்தை தூர்வாரும் பணியின்போது வடமேற்கு பகுதியில் உள்ள தெப்பக்குள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதையடுத்து சம்பவ இடத்தில் அறநிலையத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் மனோ ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது தெப்பக்குளத்தில் இருந்து அதிகளவு மண் எடுக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி இளைஞர்கள் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், தொல்லியல் துறை வல்லுநர்கள் மற்றும் ஐஐடி வல்லுநர்களிடம் பேசி பழமை மாறாமல் தெப்பகுளத்தின் சுற்றுச்சுவர் சரி செய்யப்படும் என்று உறுதியளித்தார்.
















