சென்னை சேலையூரில் ஒரே இரவில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்களின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
சென்னை அடுத்த சேலையூர், மாடம்பாக்கம் பகுதியில் ஒரே இரவில் தபால் நிலையம், மளிகைக்கடை, போட்டோ ஸ்டுடியோ, அடகுக்கடை மற்றும் வீடுகளில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி வீடியோ அடிப்படையில் கொள்ளையர்களை தேடி வந்தனர்.
அதில், இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தவர்கள், தொடர் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து, கொள்ளையில் தொடர்புடைய மதுரவாயல் ஆலப்பாக்கத்தை சேர்ந்த சூர்யா உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
















