மெக்சிகோவில் அரசாங்கத்திற்கு எதிரான GenZ போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
மெக்சிகோவில் உருபான் மேயர் கார்லோஸ் மான்சோ படுகொலை மற்றும் அரசாங்க ஊழல்களுக்கு எதிராக இளைஞர்களும் பொதுமக்களும் மாபெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
தலைநகர் மெக்சிகோவில், சுதந்திர தேவதை நினைவுச் சின்னத்தில் இருந்து சோகாலோ என்ற இடத்தில் உள்ள அதிபர் ஷீன்பாம் வீடு மற்றும் அலுவலகம் உள்ள தேசிய அரண்மனை பகுதி வரை போராட்டக்காரர்கள் ஊர்வலமாகச் சென்றனர். பின்னர், காவல்துறையினரின் தடுப்புகளை மீறி அரண்மனையை நோக்கி போராட்டக்காரர்கள் செல்ல முயன்றனர்.
அப்போது, போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதால் காவல் துறையினர் மீது போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதனால் போராட்டக்களம் போர்களமாக மாறியதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
















