சென்னை அடுத்த ஆவடியில் கணவர் இயக்கிய கார் மோதியதில், மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோனாம்பேடு பகுதியை சேர்ந்த ராஜா – இந்துமதி தம்பதி புதிய காரை வாங்கியுள்ளனர். கோயிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தபோது பார்க்கிங்கில் மோதிய காரை நிறுத்த ராஜா முயன்றார்.
அப்போது, ரிவர்ஸ் பார்க்க வலது புறத்தில் நின்றிருந்த இந்துமதி மீது எதிர்பாராத விதமாக கார் உரசியது. இதில் சுவருக்கும், காருக்கும் இடையில் சிக்கி படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
















