தெலங்கானாவில் ஆம்னி பேருந்து, மணல் லாாியின் பின்னால் மோதிய விபத்தில் 2 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜனகமா மாவட்டம் நிதிகொண்டா அருகே, சாலையில் மணல் லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அந்த வழியாக சென்ற ஆம்னி பேருந்து, மணல் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்தின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்ததுடன், அதில் பயணித்த இருவர் உயிரிழந்தனர். காயமடைந்த ஆறு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
















