வங்க தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வழக்கு தொடர்பான தீர்ப்புக்கு இன்று வெளியாகும் நிலையில் அங்கு வன்முறை சம்பவங்கள் தலைவிரித்தாடுகிறது.
வங்கதேசத்தில் 2024 ஆம் ஆண்டில் மாணவர் போராட்டம் நடைபெற்றது. இதனை ஒடுக்க அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது.
இதனால் நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். புதிய அரசு அமைந்த உடன் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை, ஊழல் செய்தது உட்பட ஏராளமான வழக்குகள் பதிவு செய்ப்பட்டுள்ளன.
இந்நிலையில் மாணவர் வன்முறை தொடர்பான வழக்கில் இன்று திங்கள் கிழமை தீர்ப்பு வெளியாகிறது. இதனையடுத்து வங்க தேச தலைநகர் டாக்காவில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.
பல்வேறு இடங்களில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஹசீனாவின் மூதாதையர் இல்லம் மற்றும் அவரது கட்சியின் அலுவலகம் கோபால்கஞ்ச் உள்ளிட்ட இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே ஆளும் அரசே வன்முறையின் பின்னணியில் உள்ளதாக ஷேக் ஹசீனா கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தீர்ப்பு வரும் என எதிரபார்க்கப்படும் நிலையில் அதன் மூலம் பெரிய வன்முறையை அரங்கேற்ற அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளனர். இதனால் வங்க தேசத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
















