பீகாரில் புதிய அரசு அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகளில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அதில், பாஜக 89 இடங்களிலும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களிலும், சிராக் பாஸ்வானின் லோக் ஜன்சக்தி 19 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
இதனையடுத்து, புதிய அரசு அமைக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன. இந்நிலையில், சிராக் பாஸ்வான், ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா கட்சித்தலைவர் சந்தோஷ் சுமன் உள்ளிட்டோர், முதலமைச்சர் நிதீஷ்குமாரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இதனிடையே ஐக்கிய ஜனதாதள எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இதில் நிதிஷ்குமார், சட்டப்பேரவை கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
















