பீகார் பாஜக இளம் எம்எல்ஏ மைதிலி தாக்கூர் மீண்டும் “கண்ணான கண்ணே’ பாடியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், 5 ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் தான் பாடிய அந்த பாடல் தற்போது வைரல் ஆகி வருவதாக தெரிவித்துள்ளார். தனக்கு பிடித்த பாடகர்களில் ஒருவராக சித் ஸ்ரீராம் இந்த பாடலை பாடியுள்ளதாகவும், இமான் இசை அமைத்துள்ளதாகவும் கூறியுள்ளது.
குரல் முழுமையாக சரியாகாத நிலையில் ரசிகர்களுக்காக மீண்டும் பாடுவதாக மைதிலி தாக்கூர் விளக்கம் அளித்துள்ளார்.
















