காங்கோவில் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில், செப்பு சுரங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்தச் சுரங்கத்தில் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரெனச் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் தொழிலாளர்கள் பலர் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடம் சென்ற மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
















