ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் துலிப் மலர் கண்காட்சிக்காக அவற்றைப் பயிரிடும் பணிகளில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஜபர்வான் மலைத் தொடரின் அடிவார பகுதியில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வசந்த காலம் தொடங்குகிறது. இந்தக் கால கட்டத்தில் சுற்றுலா பயணிகளை ஈர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி ஆண்டுதோறும் மலர் கண்காட்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அங்குள்ள இந்திரா காந்தி நினைவு துலிப் தோட்டத்தில், துலிப் மலர் கண்காட்சி நடத்தப்படவுள்ளது.
இதற்காக ஹாலந்திலிருந்து 20 லட்சம் துலிப் கிழங்குகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து அவற்றைப் பயிரிடும் பணிகளில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
70 வகையான 20 லட்சம் துலிப் மலர் கிழங்குகளை தொழிலாளர்கள் பயிருடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
















