சென்னை அடையார் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மென்பொருள் நிறுவன ஊழியரை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில் அவர் துறை ரீதியாகப் பணிமாற்றம் செய்யப்பட்டார்.
இதனால் ஏற்பட்ட பணிச்சுமை காரணமாக யுவராஜ் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கோட்டூர்புரம் மேம்பாலத்திற்கு சென்ற அவர் அடையார் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மீட்புப் படை வீரர்கள் யுவராஜை காயங்களுடன் மீட்ட நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்தச் சம்பவம்குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















