ஈக்வடாரில் மலைப் பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அம்படோவிலிருந்து, குராண்டா நோக்கி 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து சென்று கொண்டிருந்தது.
சிமியாடுக் பகுதியில் மலைப் பாதையில் பயணித்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து அங்குச் சென்ற மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்தக் கோர விபத்தில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த விபத்துகுறித்த பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
















