டாடா நிறுவனம் நீண்ட கால எதிர்பார்ப்பிற்குப் பின்பு புதிய சியரா எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
வரும் 25ம் தேதியன்று புதிய சியராஎஸ்யூவி மாடலை வெளியிடவுள்ளது டாடா மோட்டார்ஸ். அதற்கு முன்பாகத் தற்போதே இந்தக் கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விலை விவரங்கள் மட்டும் வரும் 25ம் தேதியன்று அறிவிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இறுதியாக 2003ம் ஆண்டு இந்தப் பெயரைக் கொண்டிருந்த எஸ்யூவியின் விற்பனை நிறுத்தப்பட்டது.
















