இஸ்ரோ செவ்வாய் கிரகத்தில் இயங்கும் வகையில் ஜிபிஎஸ் இல்லாத ட்ரோன் சோதனைக்கான போட்டியை நடத்தியது.
ஜிபிஎஸ் தொழில்நுட்பம் இல்லாமல் இயங்கும் ட்ரோன் போட்டியை நடத்த அண்மையில் இஸ்ரோ திட்டமிட்டது. அதன்படி Fly Me on MARS என்ற கருப் பொருளின் கீழ் போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டிக்காக மாணவர்கள் தனித்துவமான ட்ரோன்களை வடிவமைத்தனர்.
தரையிறங்கும் இடங்களை ட்ரோன்கள் தானாகவே கண்டறியவும், பாதுகாப்பாகத் திரும்பி வரும் வகையிலுட்ரோன்களை மாணவர்கள் உருவாக்கினர்.
செவ்வாய் கிரகத்தில் ஜி.பி.எஸ் போன்ற எந்தத் தொழில் நுட்ப உதவிகளும் இல்லாத வேளையில், ட்ரோன்கள் தங்களை தானே நிலை நிறுத்திக் கொள்ளும் வகையில் ட்ரோன்கள் உருவாக்கப்பட்டன.
தொடர்ந்து மங்கள்யான்-2 போன்ற எதிர்கால பயணங்களுக்கு அடித்தளமிடும் விதமாக, நடைபெற்ற இந்தப் போட்டியில் மாணவர்கள் தயாரித்த ட்ரோன்கள் பறக்கவிடப்பட்டன.
செவ்வாய் கிரகத்தின் சூழல் போன்று உருவகப்படுத்தப்பட்ட நிலப்பரப்பில் ட்ரோன்கள் சோதனை செய்யப்பட்டன. இதில் Pune Institute of Computer Technology குழுவினர் முதலிடத்தை பிடித்தனர்.
















