மாருதி தங்களுடைய மிட்-சைஸ் எஸ்யூவிக்களில் ஒன்றான கிராண்டு விட்டாராவை தயாரிப்புக் கோளாறு காராணமாக ரீகால் செய்துள்ளது.
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் எஸ்யூவிக்களில் ஒன்றாக இருந்து வருகிறது கிராாண்டு விட்டாரா.
இந்நிலையில் இந்தக் காருக்கான ரீகால் அறிவிப்பை வெளியிட்டுள்ளது மாருதி. ஒரு காரில் தயாரிப்பின் போதே பிரச்சினையான பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் அல்லது தயாரிப்புக் கோளாறு இருந்தால் ரீகால் அறிவிப்பை நிறுவனங்கள் வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
















