மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் முடவன் முழுக்கு தீர்த்தவாரி உற்வசம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை முதல் நாள், முடவன் முழுக்கு என்ற பெயரில் தீர்த்தவாரி விமரிசையாக நடைபெறும்.
நடப்பாண்டுக்கான முடவன் முழுக்கு தீர்த்தவாரியை முன்னிட்டு மயூரநாதர் கோயிலில் இருந்து சந்திரசேகர சுவாமி காவிரி துலாக்கடத்திற்கு எழுந்தருளினார்.
அங்கு, சுவாமிக்குச் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி வழிபாடு நடத்தினர்.
















