ஈரானில் யுரேனியத்தை செறிவூட்டும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்படவில்லை என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சா் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாகச் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், எங்களது அணுசக்தி தளங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதே யுரேனியம் செறிவூட்டப்படாததற்கு காரணம் என்றும், அனைத்து தளங்களும் சா்வதேச அணுசக்தி முகமையின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
அணுசக்தி திட்டம் முற்றிலும் மின்சார உற்பத்தி மற்றும் குடிமக்களுக்கான அமைதி நோக்கங்களுக்காக மட்டுமே எனவும் விளக்கமளித்துள்ளார்.
















