சவுதி அரேபியாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 42 இந்தியர்கள் மரணம் - பிரதமர் மோடி இரங்கல்!
Nov 17, 2025, 05:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சவுதி அரேபியாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 42 இந்தியர்கள் மரணம் – பிரதமர் மோடி இரங்கல்!

Web Desk by Web Desk
Nov 17, 2025, 03:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சவுதி அரேபியாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்த 42 இந்தியர்களின் குடும்பங்களுக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவில் உம்ரா புனித யாத்திரை மேற்கொண்ட 42 இந்தியர்கள், விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவின் மதினா அருகே பேருந்தும், டேங்கர் லாரியும் மோதிக் கோர விபத்து ஏற்பட்டது. இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணியளவில் நடந்த இந்த விபத்தில், பேருந்தானது முற்றிலும் தீப்பற்றிக் கருகியது.

அப்போது பேருந்தில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த 20 பெண்கள், 11 குழந்தைகள் உட்பட 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 18 பேர் ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த விபத்து தனக்கு மிகுந்த வருத்தமளிப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகக் கூறிய பிரதமர் மோடி, அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகங்கள் அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாகவும் கூறினார்.

மேலும் சவுதி அரேபியா விபத்து மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, வெளியுறவு அமைச்சகம் மற்றும் தூதரகத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், தெலங்கானா மக்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்த தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் துணை நிற்கும் என்றும் ரேவந்த் ரெட்டி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags: சவுதி அரேபியாபிரதமர் மோடி இரங்கல்42 Indians die during Umrah pilgrimage in Saudi Arabia - PM Modi condoles
ShareTweetSendShare
Previous Post

கவனம் ஈர்க்கும் மஞ்சு வாரியரின் ஆரோ குறும்படம்!

Next Post

செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 1,200 கனஅடி உபரி நீர் வெளியேற்றம்!

Related News

1,200 பேரை விடுவிக்க இலக்கு – உக்ரைன் அதிபர்

குண்டுவீச்சு பாணியில் சீன போர் விமானங்கள் ரோந்து!

சவுதி அரேபியா : வெளுத்து ஆலங்கட்டி மழை பனி போல் காட்சி!

இயற்கையாலும் தாக்குதலுக்கு உள்ளாகும் காசா – மக்கள் பாதிப்பு!

ஜப்பான் பிரதமருக்கு சீனா மிரட்டல்!

பீகாரில் நவ.20 முதலமைச்சர் பதவியேற்பு விழா!

Load More

அண்மைச் செய்திகள்

கும்பகோணம் : திருபுவனம் நெசவாளர்கள் காவடி எடுத்து பாதயாத்திரை!

தோல்வி பயத்தில் எஸ்ஐஆர் நடைமுறையைத் திமுக எதிர்க்கிறது – தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்

தஞ்சாவூர் : மதுப்பிரியரை கன்னத்தில் மாறி மாறி அறைந்த டாஸ்மாக் விற்பனையாளர்!

பழனி மலையடிவாரத்தில் கடை அமைப்பது தொடர்பாக தகராறு : பெண் கன்னத்தில் தாக்கிய திமுக பிரமுகர்!

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

மரண தண்டனை – ஷேக் ஹசீனா கண்டனம்!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு!

கட்டாய மதமாற்றம் செய்ய தனி ‘நெட்வொர்க்’ – இந்திய யாத்ரீகர்களை குறிவைக்கும் பாகிஸ்தான்!

டெல்லி தாக்குதல் விசாரணையில் திடீர் திருப்பம் – தாக்குதலுக்கு “சாத்தானின் தாய்” பயன்படுத்தப்பட்டதா?

கட்சியில் இருந்து விலகிய லாலு பிரசாத் மகள் – வீதிக்கு வந்த குடும்ப பிரச்னை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies