திருவள்ளூரில் உள்ள பூண்டி சத்திய மூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு மூன்றாயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றாக விளங்கும் இந்த நீர்தேக்கத்தில் 2 ஆயிரத்து 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக விநாடிக்கு ஆயிரத்து மூன்றாயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
கனமழை காரணமாகச் சத்திய மூர்த்தி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 32.57 அடியாக அதிகரித்துள்ள நிலையில் 2 ஆயிரத்து 398 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.
இதற்கிடையே கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
















