பள்ளிப்பாளையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில், எத்தனை முறை மது வாங்கினாலும் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் கொடுக்கத்தான் வேண்டும் என்று ஊழியர் பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்த கீழ் காலனியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
பள்ளிபாளையம் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் இந்த மதுக்கடையில் மதுபானங்கள் வாங்கும்போது பாட்டிலுக்கு கூடுதலாகப் பணம் வசூலிப்பதாகக் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், டாஸ்மாக் கடையில் மதுவாங்க சென்ற நபர் ஒருவர், 3வது முறையாக மதுபானம் வாங்குவதாகவும், இந்தப் பாட்டிலுக்காவது 10 ரூபாயை குறைத்து கொடுக்குமாறும் கேட்டுள்ளார்.
அதற்கு டாஸ்மாக் கடை ஊழியர், எத்தனை முறை மது வாங்கினாலும் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் கொடுக்கத்தான் வேண்டும் என்றும், அடுத்த முறை வாங்க பேசிக் கொள்ளலாம் எனவும் பதில் அளித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
















