அரசியலமைப்பு திருத்தத்தை எதிர்த்துப் பாகிஸ்தானில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்துள்ளனர்.
பாகிஸ்தானில் 27-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் கூட்டாட்சி அரசியலமைப்பு நீதிமன்றம் உருவாக்க வழிவகை செய்கிறது.
இதன்மூலம் வழக்குகளை தானாக முன்வந்து விசாரித்தல், நீதிபதிகள் இடமாற்றம் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் கூட்டாட்சி அரசியலமைப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்படும்.
இதனால் உச்சநீதிமன்றம் சிவில் வழக்குகளை மட்டுமே விசாரிக்கும் வகையில் தரம் குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 27-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து லாகூரில் உள்ள வழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பை அறிவித்துள்ளனர்.
















