தைவானுக்கு ஆதரவாகப் படைகளை நிறுத்துவதாக எச்சரித்த ஜப்பான் பிரதமருக்குச் சீனா மிரட்டல் விடுத்துள்ளது.
கிழக்கு ஆசிய நாடான ஜப்பானின் புதிய பிரதமராக அக்டோபரில் சனாய் தகாய்ச்சி பதவியேற்றார். இவர் நவம்பர் 7-ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது தைவானுக்கு ஆதரவாகச் சனாய் தகாய்ச்சி பேசினார். இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா, சீன மக்கள் யாரும் வரும் நாட்களில் ஜப்பானுக்கு செல்ல வேண்டாம் என்றும், தைவான் பற்றிய ஜப்பானின் ஆபத்தான கருத்துக்களால் சீனர்களுக்கு அங்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாம் என எனவும் தெரிவித்துள்ளது.
















