தென் சீன கடலில் முதல்முறையாகச் சீன ராணுவத்தின் போா் விமானங்கள் குண்டுவீச்சு பாணியில் ரோந்து சென்றன.
பிராந்திய மற்றும் சா்வதேச வா்த்தகத்துக்கு தென் சீன கடல் முக்கியப் பகுதியாக விளங்குகிறது.
அந்தக் கடலின் பெரும்பாலான பகுதிக்குச் சீனா உரிமை கோரி வரும் நிலையில், அந்தக் கடற்பகுதியில் தமக்கும் உரிமை இருப்பதாகப் பிலிப்பைன்ஸ், வியட்நாம், புரூனே, தைவான் ஆகிய நாடுகளும் தெரிவித்து வருகின்றன.
இந்தச் சூழலில், கடற்பகுதியில் சீன ராணுவத்தின் போா் விமானங்கள் குண்டுவீச்சு பாணியில் ரோந்து பணியில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
















