உக்ரைன் வீரா்களை விடுவித்துத் தாயகம் அழைத்து வர முடியும் என்று உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாகப் பேசிய அவர், துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில், கைதிகள் பரிமாற்றத்தை மீண்டும் தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறியுள்ளார்.
இதன் விளைவாக, ஆயிரத்து 200 உக்ரைன் வீரா்களை விடுவிப்பதற்காக இஸ்தான்புல்லில் கடந்த 2022-இல் இறுதியான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தங்களை மீண்டும் செயல்படுத்த இரு தரப்பினரும் ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
















