கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு சுவாமிமலை முருகன் கோயிலுக்குத் திருபுவனம் நெசவாளர்கள் காவடி எடுத்துப் பாதயாத்திரை சென்றனர்.
கும்பகோணம் அடுத்த திருபுவனத்தை சேர்ந்த நெசவாளர்கள் ஆண்டுதோறும் கார்த்திகை மாத முதல் சோமவாரம் தினத்தன்று சுவாமிமலை முருகன் கோயிலுக்குப் பால்குடம், காவடி எடுத்துப் பாதயாத்திரை செல்வது வழக்கம்.
அதன்படி கார்த்திகை முதல் சோமவாரத்தையொட்டி 200க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் சுவாமிமலை சுவாமிநாத கோயிலுக்குப் பாதயாத்திரையாக சென்று வழிபட்டனர்.
















