ஈரானில் கடுமையான வறட்சி நிலவுவதால் செயற்கை மழைப் பொழிவை ஏற்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
ஈரானில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வறட்சி நிலவி வருகிறது.
மழைப் பொழிவு வரலாறு காணாத அளவுக்குக் குறைந்ததால் நீர்த்தேக்கங்கள் வறண்டு காணப்படுகின்றன.
பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். நாட்டில் உள்ள பல அணைகளின் கொள்ளளவு ஒற்றை இலக்கத்திற்கு சென்றுள்ளன.
இதே நிலை நீடித்தால் வாழத் தகுதியற்ற இடமாக மாறிவிடும் என அங்குள்ள மக்கள் வேதனை அடைந்து வருகின்றனர். இந்நிலையில் போதுமான மழை பெய்யவில்லை எனில், தெஹ்ரானின் நீர் விநியோகம் ரேஷன் முறையில் நடத்தப்படலாம் என்றும், தலைநகரில் இருந்து மக்கள் வெளியேற்றப்படலாம் என்றும் தகவல் பரவியது.
இந்தச் சிக்கலைச் சமாளிக்க அரசு, செயற்கை மழைப் பொழிவை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளது. மேக விதைப்பின் மூலம் மழைப் பொழிவை ஏற்படுத்தி இக்கட்டாண சூழ்நிலையைச் சமாளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
















